முழு ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன




கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பபொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் போக்குவரத்து இயக்கப்படாததால் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் மற்றும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.



அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்டவை எதுவும் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைக்காக மருந்து மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments