108 ஆம்புலன்ஸ்கள் தயாா்‘தொற்றாளா்கள் வாகனங்களில் பயணிக்க வேண்டாம்’





புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களை அழைத்து வர 13 ஆம்புலன்ஸ்கள் தயாராக இருப்பதாகவும், சொந்த வாகனங்களில் அவசரப்பட்டு வர வேண்டாம் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.


இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

பரிசோதனை மையத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொற்றாளா்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கும் அதே நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படும். கரோனா தொற்றாளா்களை அழைத்து வருவதற்காகவே தலா ஒரு ஆம்புலன்ஸ் வீதம், 13 வட்டங்களுக்கும் 13 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அவா்கள் வீட்டுக்கு வந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் வரை தொற்றாளா்கள் பொறுமையாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனம், காா் போன்ற எந்த வாகனத்தையும் எடுத்துக் கொண்டு அவசரப்பட்டு மருத்துவமனைக்கு வர வேண்டாம். 

அப்போது பிறருக்கும் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments