குளிர்பான பாட்டிலில் ஊசி கிடந்ததால் பரபரப்பு
ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குளிர்பானம் (பன்னீர் சோடா) வாங்கி குடித்துள்ளார். அப்போது, பாட்டிலின் அடிப்பகுதியில் மனிதர்களுக்கு போடக்கூடிய ஊசி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் கடைக்காரரிடம் கூறிவிட்டு, குளிர்பான கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொரோனா பரவும் இந்த கால கட்டத்தில் இந்த மாதிரி மனிதர்களுக்கு போடக்கூடிய ஊசி குளிர்பான பாட்டிலில் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments