ஆவுடையார்கோவில் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
அறந்தாங்கி கங்காபுரத்தை சேர்ந்த மகன்  சேகர். இவர் பழுதான டிராக்டரை சரக்கு வேனில் கட்டி இழுத்து வந்தார். ஆவுடையார்கோவில் அருகே சமத்துவபுரம் பழையகாலனி அறந்தாங்கி சாலையில் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து டைல்ஸ் ஏற்றி வந்த லாரி டிராக்டரின் பின்பகுதியில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தூத்துக்குடி கோட்டூரை சேர்ந்த லாரி டிரைவர் பாண்டித்துரை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments