ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தியதால் குளத்தில் கவிழ்ந்த புதிய கார் கிரேன் உதவியுடன் மீட்பு
புதுக்கோட்டையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் புதிய காரை வாடிக்கையாளருக்கு டெலிவரி கொடுப்பதற்காக ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி இருந்தனர். அந்த கார் நகர்ந்து அருகே இருந்த குளத்துக்குள் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குளத்தில் விழுந்த கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட கலிப் நகர் அருகே தனியார் கார் கம்பெனி செயல்பட்டு வருகின்றது. இந்த கார் கம்பெனியில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த திருவாய்மொழி என்பவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கார் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவிற்காக சென்றது. பின்னர் மீண்டும் கம்பெனிக்கு வந்து வாட்டர் சர்வீஸ் செய்து காரை திருவாய்மொழிக்கு டெலிவரி கொடுப்பதற்காக கார் நிறுவனத்தின் வெளியே ஹேண்ட் பிரேக் போடாமல் ஊழியர்கள் நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கார் ஹேண்ட் பிரேக் போடாததால் நகர்ந்து அருகே இருந்த குளத்துக்குள் கவிழ்ந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த கார் கம்பெனி ஊழியர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றனர். பின்னர் குளத்தில் விழுந்த காரை சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு கிரேன் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட புத்தம் புதிய கார் நகர்ந்து குளத்துக்குள் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments