புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஓட்டுகள் எண்ணப்படும் சுற்றுகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. களத்தில் மொத்தம் 112 பேர் போட்டியிட்டனர்.
மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 76.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. துணை ராணுவ படையினர், போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சுற்றுகள் விவரம்
ஓட்டுகளை எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஓட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபடுவர்களுக்கு பணி ஒதுக்கீடு கணினியில் குலுக்கல் முறையில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஒவ்வொரு நாளும் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்து வருகிறது. ஓட்டுகள் ஒவ்வொரு சுற்றுவாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் எத்தனை சுற்றுகள் வரை எண்ணப்படும் என்பது தொடர்பாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கந்தர்வகோட்டை (தனி) 20 சுற்றுகள் வரையும், விராலிமலைக்கு 23 சுற்றுகளும், புதுக்கோட்டைக்கு 25 சுற்றுகளும், திருமயத்திற்கு 23 சுற்றுகளும், ஆலங்குடிக்கு 23 சுற்றுகளும், அறந்தாங்கிக்கு 25 சுற்றுகள் வரையும் எண்ணப்படும் என கூறப்படுகிறது. இறுதி சுற்றுகள் முடிந்த உடன் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.