யுபிஐ பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு






ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்ற யுபிஐ அனுமதிக்கிறது

தற்போது யுபிஐ பணப்பரிமாற்றம் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்ற யுபிஐ அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது. இதனை NPCI வழிநடத்துகிறது. இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI)) என்பது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த நிலையில் தடையற்ற யுபிஐ பணப்பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில், NPCI ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தோல்வியடையும் பணமாற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி, நிதி ஆண்டு நிறைவு என்பதால் சில வங்கிகளில் யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை தோல்வியடைந்தது. ஏப்ரல் 1 மாலை முதல் இந்த வங்கி அமைப்புகள் பெரும்பாலானவை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தடையின்றி IMPS மற்றும் UPI சேவைகளைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த ட்விட்டிற்கு கமெண்ட் செய்த பலர், தங்களது தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கான பணத்தை திரும்பப் பெறவில்லை என்ற கேள்விகளை எழுப்பினர். அதற்கு உங்கள் பணம் 24 மணி நேரத்தில் திரும்பி வரவில்லை என்றால் அபராதம் ரூ.100ஐ உங்கள் வங்கிகள் அனுப்பும் என செய்தி வெளியிட்டது. அதாவது உங்களுடைய யுபிஐ பரிவர்த்தனை தோல்வி அடைந்துவிட்டதா? நீங்கள் பணம் அனுப்பிய நபருக்கு பணம் சென்றடைய வில்லையா? ஆனாலும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துவிட்டதாகக் காட்டப்படுகிறதா? அப்படியினால் உங்கள் வங்கியிடம் இருந்து ஒரு நாளைக்கு ரூ. 100 என்ற அபராத தொகையைப் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்துவிட்டால் அடுத்த நாளே அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

அதாவது பரிவர்த்தனை செய்த நாளில் இருந்து ஒரே நாளில் பணம் திரும்ப வரவேண்டும். அப்படி வராவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அந்த வாடிக்கையாளருக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் இழப்பீடு. அவ்வாறு பணம் வந்துசேராவிட்டால் அதற்கு புகார் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாகப் பணம் அனுப்பும்போது சில சிக்கல்களும் இருக்கின்றன. நீங்கள் இன்னொருவருக்குப் பணம் அனுப்பும்போது, உங்களது கணக்கில் பணம் எடுக்கப்பட்டுவிடும், ஆனால் போகவேண்டிய வங்கி கணக்கிற்கு பணம் போகாது. இந்த பிரச்சனை அதிகரித்து வருவதால் இத்தகைய புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments