கட்டுமாவடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு




 

கட்டுமாவடியில் கடல் உள் வாங்கியதால் தரை தட்டி நின்ற படகுகள்.

கட்டுமாவடியில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் உள்ள கட்டுமாவடி மீன் பிடித்தளத்திலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பிய மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

வழக்கம்போல கடலுக்கு செல்வதற்காக நேற்று காலை மீனவர்கள் வந்தபோது சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். படகுகளும் தரை தட்டி நின்றன.

இதுகுறித்து மீனவர் கணேசபுரம் ராஜசேகர் கூறுகையில், தற்போது கிழக்கிலிருந்து மேற்காக கொண்டல் காற்று வீசுவதால் கடல் நீர் வெள்ளம்போல் கரைக்கு வந்து மீண்டும் கடலுக்கு சென்று விடும். கொண்டல் காற்று கடலில் வீசுவது நின்று விட்டால் கடல்நீர் இயல்பு நிலைக்கு மாறும். 

கொண்டல் காற்று கடலில் பலமாக வீசியதால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளது. இது இயல்பாக நடக்கும் ஒன்றுதான். பயப்படதேவையில்லை என்று கூறினார். பின்னர் தரை தட்டிய படகுகளை கடலுக்கு இழுத்துச் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடல் நீர் திடீரென உள்வாங்கியது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments