ஏப்ரல் 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவித்திருந்த உள்ளூர் விடுமுறை ரத்தானது - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்






ஏப்ரல் 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவித்திருந்த உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் கூறினார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இரு தினங்களுக்கு முன்பே நிறைவு பெற்றது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நடைபெற்றது. மேலும் 7 மணிக்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் தலைவிரித்தாடுகிறது.

மேலும் தமிழக அரசு மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தியது. மேலும் தமிழக அரசானது இன்று மதியம் தளர்வுககள் மற்றும் தடைகள் குறித்தான அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கையுடன் திரைப்படம் பார்த்த அனுமதித்துள்ளது.

மேலும் வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிக்கு மேல் நடைபெறக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் பத்தாம் தேதிக்கு அப்புறம் கோவில் திருவிழாக்கள் ஊர்வலங்கள் இருக்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த அறிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புதுக்கோட்டையில் பன்னிரண்டில் உள்ளூர் விடுமுறை என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனை ரத்து செய்துள்ளார். மேலும் அரசின் கட்டுப்பாடு காரணமாக ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த நார்த்தாமலை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேரோட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த விடுமுறையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments