அரசநகரிப்பட்டினத்தில் சட்டமன்ற தேர்தலில் 67% வாக்குபதிவு





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் பொன்னமங்கலம் ஊராட்சி மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  06/04/2021 செவ்வாய் கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 7.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

அரசநகரிப்பட்டினத்தில் காலை 7 மணி முதலே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இந்நிலையில் வெயில் சற்று குறைந்தும், வாக்குப்பதிவு நேரம் முடிவடைய கடைசி நேரம் காரணமாக வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஆண்கள், பெண்கள் தனித் தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்..

2021 சட்டமன்ற தேர்தலில் அரசநகரிப்பட்டினத்தில் பதிவான வாக்கு விபரம் :

வார்டு வாரியாக விபரம்

வாக்குச்சாவடி எண் 165

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 1081

பதிவான வாக்குகள் 
எண்ணிக்கை: 731

வாக்குச்சாவடி எண்  166

மொத்தம் வாக்குகள் எண்ணிக்கை: 969

பதிவான வாக்குகள் 
எண்ணிக்கை: 636

அரசநகரிப்பட்டினத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை:

மொத்தம் - 1367 (67%)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments