தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 9,344 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 9,344 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
 
அதன்படி, தமிழகத்தில் இன்று 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 2,884 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 65,635 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரனோ வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5,263 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 02 ஆயிரத்து 022 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 071 ஆக அதிகரித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments