தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை






தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.

கரோனா சூழ்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. எனினும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பள்ளி நிர்வாகங்கள் தம் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வருமாறு வலியுறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, ''அரசின் உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் செல்லும். தனியார் பள்ளி ஆசிரியர்களைக் கண்டிப்பாகப் பள்ளிக்கு அழைக்கக் கூடாது. மே 1 முதல் அவர்களும் பள்ளிக்கு வரத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments