இஸ்லாமியர்களுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் அறிவிப்பு



கொரொனா பெருநோய் தொற்றின் இரண்டாம் கட்ட பரவலை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்திருந்த வழிபாட்டு தலங்களுக்கான இரவு 8 மணி வரையான அனுமதியை முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணி வரை நீட்டித்து தந்த தமிழக அரசுக்கு தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

கண்ணியமிகு ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் தராவீஹ் தொழுகைக்கான வழக்கமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் நோய் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு

முகக் கவசம் அணிவது

போதுமான இடைவெளியை கடைபிடிப்பது

வீட்டிலேயே ஒழு செய்துகொள்ள அறிவுறுத்துவது

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்க கூறுவது

உள்ளிட்ட அரசு அறிவித்திருக்கிற எச்சரிக்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுகொள்கிறது.

இரவு 10 மணி வரை அரசு அனுமதித்திருந்தாலும் கூட இஷா-விற்கான நேரம் வந்ததும் பாங்கு சொல்லி விரைவாக இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை நடத்தி முடித்துவிடுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுகொள்கிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments