ரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி தலைமை செயலகத்தில் மஜக மனு..!தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாதத்தில் வருடா வருடம் தமிழக அரசு சார்பாக அரிசி வழங்கப்படும். 

ஆனால் இவ்வருடத்திற்கான அரிசி வழங்குதல் குறித்தான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை, இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு.செந்தில்குமார் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் ஆகியோர் சந்தித்து பள்ளிவாசல்களுக்கு விரைந்து அரிசியை அனுப்புமாறு மனு அளித்தனர். 

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி 
MJKitWING 
மத்திய சென்னை
10.04.2021

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments