இரண்டு மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!புதுக்கோட்டை நகராட்சி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் வழங்கப்படாததை  கண்டித்து தூய்மை  பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42  வார்டுகளிலும் பொதுமக்களால் வீசி எறியப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து விட்டதாகவும் வட்டிக்கு கூட யாரும் பணம் கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் மேலும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருவதாகவும் எனவே உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் நாளை திங்கள்கிழமை பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் வெள்ளிக்கிழமை மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் உறுதி அளித்ததை தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments