தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம் தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை எனவும்  ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

மதியம் 1.30 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ''நீட் தேர்வை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்'' என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் ''ஏற்கனவே தமிழக அரசு செயல்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறையை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம்'' எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த, முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments