வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜை பாஸ்ட் பார்வேர்டு செய்யும் ஆப்சன் - விரைவில் அறிமுகம்







வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பார்வேர்டு செய்து கேட்கும் ஆப்சனை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்சன் மொபைல்களில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜில் பேசுவது மெதுவாகவும் அல்லது பெரிய வாய்ஸ் மெசேஜாக இருந்தால், அதனை பாஸ்ட்பார்வேர்டு செய்துகொள்ளும் வசதியை கொண்டுவரவுள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் மொபைல்களுக்கு மட்டும் இந்த ஆப்சன் கிடைக்க உள்ளது. இந்த பாஸ்ட் பார்வேர்டு ஆப்சன் 1x, 1.5x மற்றும் 2x என்ற மூன்று நிலைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்லோவாக கேட்கும் அல்லது பேக்வேர்டு (backward) செய்து பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை.

புதிய அப்டேட் குறித்த முழுவிவரத்தையும் வாட்ஸ்அப் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனமான வாட்ஸ்அப் தனது யூசர்களுக்கு அறிவிக்க உள்ளது. நண்பர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜானது அவர்கள் அனுப்பும் நார்மல் ஸ்பீடில் இருக்கும். உங்களுக்கு வேகமாக வேண்டும் என்றால் மேனுவலாக செட்டிங்ஸை மாற்றிக்கொள்ள வேண்டும். வாய்ஸ் மெசேஜ் ஸ்பீடை மாற்றிக்கொள்வதற்கான ஐகான் வாட்ஸ்அப் திரையில் தோன்றும். யூ டியூப் மற்றும் டெய்லிமோசன் போன்ற தளங்களில் இருக்கும் கூடுதல் ஆப்சன்களையும் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தலாம் என்றும் யூசர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, வாட்ஸ்அப் நிறுவனம் கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் பங்கேற்றுள்ளது. அதற்காக, உலக சுகாதார மையம் மற்றும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கரம்கோர்த்துள்ள வாட்ஸ் அப், தங்களது மெசேஜ் தளத்தில் புதிதாக வேக்சின் ஃபார் ஆல் (Vaccines for All‘) என்ற ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கரம்கோர்த்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தடுப்பூசி குறித்தும், கோவிட் வைரஸ் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் உதவி எண்களையும் வழங்குகிறது.

தடுப்பூசிக்காக பதிவு செய்வது தொடர்பான தகவல்களையும் வாட்ஸ்அப் வழங்க தொடங்கியிருக்கிறது. புதிய ஸ்டிக்கர்களை பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஸ்டிகர்கள் அனைத்தும் மகிழ்ச்சி, கவலை, தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட்- லிருந்து மீள்வது குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் யூசர்களுக்கு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பரவி வரும் வைரஸ் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனமும் கவலையை தெரிவித்துள்ளது. உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments