புதுக்கோட்டை அருகே மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் உயிரிழப்பு


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி அஞ்சலி (வயது 55). விவசாயிகளான இந்த தம்பதி கறவை மாடுகள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அஞ்சலி வீட்டு அருகே பசுமாடுகளை கட்டி இருந்தார். அப்போது,வீட்டின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன.

தகவல் அறிந்த  வல்லத்ராகோட்டை மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசாரும் வந்து பார்வையிட்டனர். இந்த மின்கம்பி ஏற்கனவே தாழ்வாக சென்றுள்ளது. இதனை சீரமைக்க  பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை சரி செய்து இருந்தால் தனது மாடுகள் பலியாகி இருக்காது என அஞ்சலி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அதேநேரத்தில் மின்கம்பி அறுந்த நேரத்தில் மனிதர்கள் சென்று இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments