லாரியின் அடியில் சிக்கிய கன்றுக்குட்டியை மீட்க தாய் பசுவின் பாசப் போராட்டம்




புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் நேற்று ஒரு லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் அந்த கன்றுக்குட்டிவெளியே வரமுடியாமல் தவித்தது. இதனை கண்ட தாய்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த கன்றுக்குட்டியினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாய் பசு, அவர்களை நோக்கி முட்ட வந்தது. இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். லாரியின் அடியில் இருந்து கன்றுக்குட்டி வெளியே வர முயற்சித்தும் முடியவில்லை. தலைப்பகுதி மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடல் முழுவதும் வரமுடியவில்லை. இதனால் தாய் பசுவை சற்று தூரம் விரட்டி விட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியின் கால்களை மடக்கி வெளியே இழுத்து காப்பாற்றினர். துள்ளிக்குதித்து ஓடி வந்து தாய் பசு அருகே அந்த கன்றுக்குட்டி நின்றது. குட்டியை தாய் பசு தழுவி அரவணைத்து அழைத்து சென்றது. கன்றுக்குட்டியை மீட்க தாய் பசு பாசப்போராட்டம் நடத்தியதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments