புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு: வெறிச்சோடிய மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் பகல் 12 மணிக்குப் பிறகு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. 

மாநிலம் முழுவதும் பகல் 12 மணிக்குப் பிறகு புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மீமிசலில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதிய விதிமுறைகளுடன் மே 6-ம் தேதி பகல் 12 மணி முதல் மே 20-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து மே 6 அன்று மீமீசலில் பகல் 12 மணி முதல் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும். பயணிகள் ரயில், பஸ்களில் மற்றும் வாடகை டாக்சிகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது

இந்த ஊரடங்கை முன்னிட்டு மீமிசல் பகுதியில் அறந்தாங்கி சாலை ,பட்டுக்கோட்டை சாலை,தொண்டி சாலை உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்துச் சாலைகளிலும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கிய அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் மற்றும் மக்கள் நடமாட்டமும் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதனையொட்டி நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டன. அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதியத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மிகக்குறைந்த அளவில் மட்டுமே வாகனங்கள் சென்றதை காண முடிந்தது.  ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல், பேக்கரிகளில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மதியத்திற்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது

பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments