கொரோனா உயிரிழப்பை தடுக்க கீழக்கரையில் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் 100 நபர்களுக்கு இலவச கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர்!



கீழக்கரை  மக்கள் சேவை அறக்கட்டளையின் 18-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு இலவச கையடக்க ஆக்சிஜன்  சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் எம்.கே.இ.உமர் தலைமை வகித்தார். கீழக்கரை திமுக நகர செயலாளர் பசீர் அகமது. காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மாவட்ட காஜி வி.வி.ஏ.சலாஹூதீன் ஆலிம் வரவேற்றார். முன்னதாக லெப்பை தம்பி கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார். ஜஹாங்கீர் அருவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் அரிசி பருப்பு. கல்வி ஊக்கத்தொகை. மருத்துவ உதவித்தொகை. திருமண உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை ஆண்டுதோறும் செய்துவரும் நிலையில் தற்போது கொரானா அதிகமாக பரவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மேற்கண்ட உதவிகளோடு ஆக்சிஜன் குப்பிகளையும் இலவசமாக வழங்கினர்.

இது குறித்து மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் உமர் பேசுகையில். தற்போது கொரானா பாதித்தவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப் பட்டு வருவதை தடுப்பதற்காக இந்த ஆக்சிஜன் குப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் குப்பிகள் கொரானா பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் உயிர் இழந்து விடுகின்றனர் அதுபோல் ஆகாமல் தடுப்பதற்காக இந்த ஆக்சிஜன் குப்பிகளை வழங்கியுள்ளோம்.
இதை வாயில் வைத்து இரண்டு வினாடிகள் அழுத்தினால் இரண்டு நிமிடங்கள் மூச்சுத் திணறல் இல்லாமலிருக்கலாம் இதுபோல் 120 முறை அழுத்தலாம் ஆகவே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்படாமல் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த குப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இவ்விழாவில் மின்சார மின்சாரத் துறை சார்பாக முருகன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ஹபீப் முகம்மது தம்பி. கமர் சமான் மற்றும் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகம்மது சிராஜுதீன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments