முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகங்கள் வருகிற 31-ந் தேதி வரை இயங்காது



பாஸ்போர்ட்டு அலுவலகங்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ளது. திருச்சியில் சாஸ்திரி சாலையில் கோகினூர் தியேட்டர் அருகிலும், தஞ்சாவூரிலும் தலா ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையம் உள்ளன. இது தவிர 5 தபால் நிலையங்களில் அஞ்சலக பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் வசதி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதன் காரணமாக கடந்த 10-ந் தேதியிலிருந்து நேற்று வரை பாஸ்போர்ட்டு அலுவலகம், மற்றும் சேவை மையங்கள் தபால் நிலைய சேவை மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மே 24-ந் தேதி (இன்று) முதல் 31-ந் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக திருச்சி மண்டலத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட்டு சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் ஆகிய அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை இயங்காது என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி ஆர்.ஆனந்த் அறிவித்து உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments