கொரோனா தடுப்பு பணி- தமிழக பஞ்சாயத்துகளுக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு






25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.

கொரோனா வைரசின் 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சில மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் தொற்று பரவிவருகிறது. நோய்த்தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி வழங்குகிறது.

அவ்வகையில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ.1441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு ரூ.861.4 கோடியும், பீகாருக்கு ரூ.741.8 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நிதியின் முதல் தவணையை ஜூன் மாதம் வழங்கவேண்டும் என 15வது நிதி கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. எனினும், தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments