புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் எம்எல்ஏ ஆய்வு


புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ இன்று ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ வை.முத்துராஜா, சென்னையில் இருந்து இன்று (மே 09) அதிகாலை புதுக்கோட்டை திரும்பினார்.

பின்னர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கவச உடை அணிந்தபடி ஆய்வு செய்தாார். அங்கு தங்கி இருந்த நோயாளிகளிடம் பேசினார்.

பின்னர், சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவுக்கு இருப்பு இருக்கிறதா என மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்னர் முத்துராஜா எம்எல்ஏ கூறுகையில், "நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சத்தான உணவு வழங்கப்படும். மருத்துவ கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments