கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு! கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரும் ஓற்றுமையுடன் செயல்படுவோம்!



இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட 2021 ஆண்டு இரண்டாம் அலை கொரோனா வியூகம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனையில் படுக்கை அறைகள் தீர்ந்துவிட்டது. கொரோணா கேஸ்கள் அதிகரிப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற இடமில்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் ஒரு போரே நடைபெற்று வருகிறது.

கொரோனாவுக்கு நாம் வாழ பழகிக் கொண்டாலும் இக்கால சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்தாலும் அதைவிட பலமடங்கு நமக்கு நாமே கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.செல்போன் கால் முதல் வீட்டு டிவி வரை எல்லா இடத்திலும் கூறுவது முககவசம் அணியுங்கள் என்று தான்.

அதை கேட்டு கேட்டு அழுத்துபோனாலும் முககவசம் அணிவது தான் தன் உயிர் காப்பாற்றும் கருவியாக திகழ்கிறது. ஆனாலும் நாம் போடுவதில்லை நீ என்ன சொல்ல நான் ஏன் கேட்க இப்போ நேரம் இல்லை.

மருத்துவமனை இருக்கு… மருத்துவர்கள் இருக்கர்கள்… ஆனால் சிகிச்சைக்கு இடமில்லை.

ஒரு உயிர் பிரியும் போது தான் புரியும் உயிரின் அருமை.. பிரிந்த பிறகு வருத்தப்படுவதைவிட சிந்தித்து முன்னே செயல்படுவது புத்திசாலித்தனம்.

கொரோனாவின் தாக்கத்தை அன்றாட தொலைகாட்சிகளில் நாம் காண்கிறோம். அந்த நிமிடம் மட்டும் தான் உணர்வு இருக்கிறது. பிறகு வெளியே செல்லும்போது முககவசம் அணியாமலும் எந்த ஒரு கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் செல்கிறோம். இது தான் அன்றாட வாழ்க்கையில் நடந்து வருகிறது. ஒரு சிலர் தனது உயிர் முக்கியம் அதுமட்டுமின்றி வீட்டில் இருக்க கூடிய குழந்தைகள், பெரியோர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நாம் முககவசம் இல்லாமல் வெளிய சென்றுவிட்டு வருவதால் தொற்று பரவிவிடுமோ என்ற பயத்தில் சிலர் முககவசம் அணிகிறார்கள்.

கொரோனவால் பாதிக்கப்பட்டவர் அதிகமான பெரியோர்கள், குழந்தைகள் உள்ளன. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார், அரசு மருத்துவமனைகளின் நிலைமை.

ஆதலால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அதனை எதிர்கொள்ள முகக்கவசம் என்னும் ஆயுதத்தை கையிலெடுப்போம்

இச்செய்தியை வெறும் செய்தியாக பார்க்காமல் ஒரு உணர்வோடு, சிந்தித்து அரசு சொன்ன அறிவிப்புகளை ஏற்று பின்பற்றுவோம் .

கொரானாவில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

* சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.

* ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.

* வீட்டின் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.

* இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது.

* ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.

* கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.

*கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.

*காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால்  மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.

இவைதான் கொரோனாவைத் தடுக்கும் அடிப்படை விஷயங்கள். இதுபோன்ற எளிதான வழிமுறைகள்தான், விலைமதிப்பற்ற உயிர்களைக் கொள்ளை நோய்க்குப் பலி தராமல் தடுக்கும் நம்மால் இயன்ற நடவடிக்கைகள். தேவையற்ற அச்சத்தை ஒதுக்கும் அதே வேளையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருமுன் காப்பது அவசியம்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போதும், வெளியூர் செல்லும்போதும் உங்கள் வீட்டு குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்பம் நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். 

வெளியில் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிவது

வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். 

மருத்துவ தேவைகளுக்காக வெளியூர் செல்லும்  பொது மக்கள் தயவு செய்து முக கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டுகிறோம். 

மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது குடும்பத்தையும், உறவினர்களையும் நமது ஊரையும்  கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

எனவே மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை GPM மீடியா வாசகர்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ளும்படி GPM மீடியா சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முகக்கவசம் இனி உயிர் கவசம்

தொகுப்பு.... 
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments