தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்ப்புஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்தி, வெளியூர் செல்வதாக அரசு கூறியிருந்த நிலையில் மீண்டும் அப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தளா்வுகளுடன் இணைய பதிவு முறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

 மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு மேற்கொள்வது அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதில் தனிநபர்கள் நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள முடியும். மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், திருமணம் என்ற பிரிவை இ-பதிவிற்கான வலைதளத்திலிருந்து தமிழக அரசு நேற்று நீக்கியது. 

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், திருமணம் என்ற பிரிவை தவறாக பயன்படுத்தி பலர் பதிவு செய்து வருகின்றனர். அதிகமான மக்கள் வெளியே வரும் சூழல் எழுந்துள்ளதால் திருமணம் என்ற பிரிவை நீக்கியுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் இ-பதிவு இணையதளத்தில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments