கோபாலப்பட்டிணத்தில் பயன்படுத்திய பிறகு சாலையில் வீசப்படும் முககவசங்கள் - தொற்று நோய் பரவும் அபாயம்



கோபாலப்பட்டிணத்தில் பயன்படுத்திய பிறகு சாலையில் வீசப்படும் முககவசங்கள் - தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் சாலைகள் மற்றும் சாலையோரங்களில் சிலர் பயன்படுத்திய முககசங்களை வீசி செல்கின்றனர்.

இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது  பொதுமக்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் வலம் வருகின்றனர்.
 
இதனால் கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. எனவே வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

அதே நேரத்தில் பயன்படுத்திய முககவசங்களை சாலைகளில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஓருவர் கூறியாதவது:

தற்போது கொரானா இரண்டாவது அலை கிராம பகுதிகளில் தீவிரமாக பரவி வருகிறது . இந்த சூழலில் பொதுமக்கள் அத்தியவசிய தேவகைக்காக வெளியே செல்லும் போது முகக்கவசம் அனிந்து செல்லுங்கள், மேலும் சாலையோரங்களில் முகக்கவசங்களை தூக்கி விசாதீர்கள், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சமூக இடைவெளி பின்பற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments