கோபாலப்பட்டிணத்தில் சதம் அடித்த வெயில். கடும் வெப்பத்தால் மக்கள் அவதி!தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் மே 4 முதல் தொடங்கி மே 29 நேற்று நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை போட்டு தாக்கி வருகிறது. இன்னொரு பக்கம் கோடை வெயிலும் மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் மே 29 2021 நேற்று அக்னி வெயில் இறுதி நாள் சுட்டெரித்து வெயில் சதம் அடித்தது.

கடந்த 4-ந்தேதியன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து கோபாலப்பட்டிணத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

சுட்டெரித்த வெயிலால் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியவில்லை. பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் தென்பட்டது. இதனால் மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் கோபாலப்பட்டினத்தில் சில நாட்களில் மழை பெய்தது. மேலும் ஓரிரு நாட்களை தவிர, வெயில் கடுமையாக  சுட்டெரித்தது. வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் நேற்று (சனிக்கிழமை) நிறைவு பெற்றது. நேற்று கோபாலப்பட்டிணத்தில்  100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments