அரியலூர்: பேருந்தின் சக்கரத்தில் சிக்கியும் தரமான தலைக் கவசத்தால் உயிர்பிழைத்த இளைஞர்


அரியலூரில் விபத்தின்போது பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் அணிந்திருந்த தலைக்கவசத்தால் உயிர் தப்பி சம்பவம் நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 சுண்டக்குடி பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வளைவில் எதிரே வந்த மினி பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார். இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தின் அடியில் இருசக்கர வாகனமும், மற்றொரு சக்கரத்தில் இளைஞரும் சிக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், சத்தியசீலன் அணிந்திருந்த தலைக்கவசம் அவரை காப்பாற்றியது.

தலைக்கவசம் மீது பேருந்து ஏறி நின்றபோதும், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் பத்திரமாக அவரை மீட்ட பயணிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கை, கால்களில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments