அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP சார்பில் வீடுதேடி ஃபித்ரா மற்றும் முககவசம் வினியோகம்!


இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில்  ஏழைமக்களுக்கு வீடுதேடி ஃபித்ரா மற்றும் முககவசம் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்  அஜ்மீர் அலி மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர்கனி ஆகியோர் முன்னிலையில் மஜக  மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி வினியோகத்தை துவக்கி வைத்தார். 

மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது,  இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் அமீது, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதிக், நகர செயலாளர் ஜலாலுதீன் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரம்ஜான் மாத ஃபித்ரா எனும் தர்மம் 5 கிலோ பொன்னி அரிசி மற்றும் முககவசம் ஆகியவற்றை அறந்தாங்கி  மணிவிளான், கோபாலசமுத்திரம், ஜே.ஜே நகர். அவுலியா நகர், கே.கே. நகர் அக்னிபஜார் பகுதிகளில் உள்ள சுமார் 250 ஏழை குடுமபங்களுக்கு வீடுதேடி வாகனத்தில் வினியோகம் செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments