ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு – வெறிச்சோடிய மீமிசலில் கிழக்கு கடற்கரை சாலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசலில் 
ஞாயிற்றுக்கிழமை நேற்று தளர்வுகள் அற்ற முழு ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மீமிசலில் ஊரடங்கு விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஞாயிறு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, மீமிசல் பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் பால், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. 

மேலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே சுற்றுவதை தடுக்கும் விதமாக மீமிசலில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்களை பிடித்து  எச்சரித்து அனுப்பினர்.

ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments