ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடுதமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆவின் பால் விலை குறைப்புக்கான கோப்பில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன்படி லிட்டருக்கு 6 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விலை மாற்றம் மே 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான ஆணையும் நேற்றே வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு புதிய விலைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி குறைக்கப்பட்ட விலையின் அடிப்படையில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பல்வேறு வகை பால்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக 16.05.2021 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து பெற்றுக் கொள்ளலாம். கீழ்க்கண்ட விலை பட்டியல் 16.05.2021 முதல் அமலுக்கு வருகின்றது.

சென்னையில் பிரதி மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பால் அட்டை 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பால் அட்டை விலைப்பட்டியல்

இதற்கு உண்டான பால் அட்டைதாரருக்கு 16-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை வழங்கப்படும். எனவே நுகர்வோர்களுக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும்போது ஈடு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments