கோட்டைப்பட்டினம் பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலிகோட்டைப்பட்டினம் பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலியானது.

கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் புள்ளிமான் ஒன்றை தெரு நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த புள்ளி மானை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு கரகத்திக்கோட்டை பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறிது நேரத்தில் செத்தது. பின்னர் அந்த மானுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments