தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பொது முடக்கத்தை மக்கள் முறையாக கடைப்பிடிக்கும் நோக்கில் இ-பதிவு முறையையும் அமல்படுத்தியது தமிழக அரசு. அதன் படி, தற்போது மாவட்டத்திற்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லவும் இ – பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மூன்று வகையான காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. மருத்துவம், முதியோர் பராமரிப்பு, மற்றும் துக்க நிகழ்வுகளுக்காக இ – பாஸ் வழங்கப்படுகிறது. திருமணம் என்னும் பிரிவும் இ-பதிவு போர்ட்டலில் இருந்தது. அதை பலர் தவறாகப் பயன்படுத்தியதால், திருமணம் என்னும் பிரிவை தமிழக அரசு நீக்கிவிட்டது. இது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. உறவினர்களின் திருமணத்துக்கு செல்லும் மக்கள் எப்படி இ-பாஸ் பெறுவார்கள்? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
அதே போல, மருத்துவ அவசரம் என்றால் அதற்கான சான்றுகளை காண்பித்து பயணிக்க முடியும். ஆனால், இறப்புக்கு எத்தகைய சான்றிதழ்களை காண்பித்து இ-பாஸ் பெற முடியும்? என்ற கேள்வியும் எழுந்தது. இதுமட்டுமில்லாமல், கணினி புலைமை வாய்ந்தவர்களால் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். சாதாரண மக்களால் இந்த இ-பதிவு முறையை பயன்படுத்த முடியாது. இது போன்ற பல நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்னைகள் இ-பதிவு முறையில் தொடருகின்றன.
இந்த நிலையில், இ-பதிவு குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டணமில்லா இந்த சேவையை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொண்டு மக்கள் சந்தேகங்களை கேட்டறியலாம் என்று தெரிவித்துள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.
அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.