நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மீமிசல் கடை வீதிகளில் பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள்:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பால் மீமிசல் முக்கிய வீதிகளில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மக்கள் தேவையின்றி வெளியே வருவதாலும், காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றிக் கூடுவதாலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, தளர்வுகளற்ற முழுக் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நேற்று அரசு அறிவித்துள்ளது. மே 24 முதல் இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டிப் பொதுமக்களின் வசதிக்காக நேற்றும் இன்றும் இரவு 9 மணி வரை கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது.

ஊரடங்கு அறிவிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் மளிகை உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய வீதிகளில் மக்கள் திரண்டனர்.  சமூக இடைவெளியுடன் & மாஸ்க் அனியுமாறு .பொதுமக்களுக்கு போலீஸார் மைக் மூலம் எச்சரித்தனர்.

இதேபோன்று மீன், இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் திரண்டனர். முன்கூட்டியே வாங்கி வைக்கும் நோக்கில் கூட்டம் அலைமோதியது. விழாக்களை முன்னிட்டுப் பொருட்கள் வாங்கும் கடைகளிலும் மக்கள் காணப்பட்டனர். .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments