கொரோனா 2வது அலை வைரஸ் பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சு காரணம் என சமூகவலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என Fact Check மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் :
வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், கொரோனா வைரஸின் 2வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க் பரிசோதனை காரணம், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூலம் வைரஸ் பரவி வருகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், 5ஜி நெட்வொர்க் டவர்கள் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"கொரோனா வைரஸ் 2வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க் பரிசோதனையால் வெளியாகும் கதிர்வீச்சைத் தவிர வேறு காரணம் இல்லை. 5ஜி டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றை நச்சுப்படுத்துகிறது. இந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் உயிரிழக்கின்றனர். இதனால், 5 ஜி நெட்வொர்க்கை தடை செய்ய வேண்டும், அதன்பிறகு அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். 5ஜி கதிர்வீச்சை வீடுகளிலேயே நம்மால் உணர முடியும்.
: காற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்
அனைவராலும் முடியாது என்றாலும் அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 5ஜி கதிர்வீச்சு வீட்டில் இருந்தால், வாய், மூக்கு வறண்டுவிடும். உடலில் ரத்த உறைவு ஏற்படும். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால், 5 ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சே காரணம். 4ஜி நெட்வொர்க் வந்தபோது பறவைகள் எப்படி அதிகளவில் இறந்ததோ, அதனைப்போல் 5ஜி நெட்வொர்கின் கதிர்வீச்சு மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கிறது. 5ஜி நெட்வொர்க்கை எதிர்த்து அனைவரும் ஒன்றாக போராடுவோம்" என அந்த தகவல் உள்ளது.
தகவலின் மையக்கருத்து; மக்கள் கொரோனா வைரஸால் இறக்கவில்லை, 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சால் இறக்கின்றனர்.
உண்மை கண்டறிவோம்;
1. 5ஜி நெட்வொர்க் கொரோனா வைரஸை பரப்புகிறதா?
மே 4, 2021ல் எக்னாமிக் டைம்ஸில் வெளியான செய்தின்படி, 5ஜி சோதனைக்கு மத்திய அரசு 13 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்களான ZTE, Huawei -க்கு அனுமதியில்லை. ஜியோ, பி.எஸ்.என்.எல், ஏர்டெல், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம், தங்களுடைய உள்கட்டமைப்புகளை பயன்படுத்தி 5 ஜி நெட்வொர்க் பரிசோதனையை தொடங்கியுள்ளது. ஜப்பான் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் OpenRAN டெக்னாலஜியை பயன்படுத்த உள்ளனர். ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல், வோடோஃபோன் ஆகிய நிறுவனங்கள் சோதனை மேற்கொள்ள, அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
: உடலின் ஆக்சிஜன் அளவை எளிதாக தெரிந்து கொள்ள பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்துவது எப்படி?
Qualcomm தகவலின்படி, டிசம்பர் 2020 வரை இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் வெளியிடப்படவில்லை எனக் கூறியுள்ளது. ஆனால், மார்ச் 2020 முதல் இந்தியாவில் முதல் அலை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியது. 5 ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது, அந்த நாடுகளில் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமே இருக்கிறது. 5 ஜி நெட்வொர்க் கதிர்வீச்சால் கொரோனா பரவுவதாகவும், அதனால் மக்கள் இறக்கின்றனர் என்ற தகவல் இதன்மூலம் பொய் என நிரூபணமாகியுள்ளது.
: கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதா சீனா?- புதிதாகக் கிடைத்த ஆதாரங்களினால் பகீர்
5ஜி நெட்வொர்க் பரிசோதனையில் வெளியாகும் கதிர்வீச்சால் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்பு இருக்கிறதா? என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், அந்த மாதிரியான பாதிப்புகள் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், கதிர்வீச்சுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் தகவலை முற்றிலுமாக உலக சுகாதார நிறுவனம் நிராகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் மட்டுமே கொரோனா பரவும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
5ஜி, 4ஜி நெட்வொர்க் கதிர்வீச்சால் பறவைகள் இறக்கிறதா?
5ஜி மற்றும் 4 ஜி நெட்வொர்க்கில் வெளியாகும் கதிர்வீச்சுகளில் இருந்து பறவைகள் இறப்பதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஜியோவின் 5ஜி சோதனையால் பறவைகள் இறப்பதாக அந்த தகவல் உள்ளது. ஆனால், ஜியோவுக்கு 5ஜி நெட்வொர்க் பரிசோதனை மேற்கொள்ள இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.
: மோசடிகளை தவிர்க்க கோவின் போர்ட்டலில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு!
மேலும், 5ஜி நெட்வொர்க் கதிர்வீச்சால் பறவைகள் இறப்பதாக வெளியான தகவலிலும் உண்மையில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் கடற்கரையோரத்தில் பறவைகள் கூட்டமாக இறந்து கிடந்ததற்கும் இதுவே காரணம் என கூறப்பட்ட நிலையில், அதனை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. UNICEF அமைப்பும் 5ஜி நெட்வொர்க் கதிர்வீச்சு பறவைகளை பாதிக்கிறது என்பதை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஆய்வுகளில் அந்த செய்தி உண்மையில்லை என்றும், பொய்யாக தகவல் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.