ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் - தமிழக அரசு





    
ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டார்.

ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் மீதி ரூபாய் ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரே‌ஷன் கடைகளில் முற்பகல் நேரத்தில் மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம்  வழங்கப்படுகிறது.  வருகிற 15 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை டோக்கன் வழங்கப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments