கோபாலப்பட்டிணம் & R.புதுப்ப்ட்டிணத்தில் ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம்கோபாலப்பட்டிணம் மற்றும் R.புதுப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பில்  பொதுமக்களுக்கு   கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் R.புதுப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சி சார்பில் 18.05.2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணம்

கோபாலப்பட்டிணத்தில் GPM பொதுநல சேவை சங்கம் தலைவர் ASM செய்யது முகமது அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

மேலும் இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.


R.புதுப்பட்டிணம்

இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.

கோபாலப்பட்டிணம் மற்றும் R.புதுப்பட்டினம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்த ஊராட்சி நிர்வாகத்திற்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த 16.05.2021 அன்று GPM மீடியா வாயிலாக கோபாலப்பட்டிணத்தில் கபசுர குடிநீர் மற்றும் கிருமிநாசினி தெளிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments