கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் முக்கியஸ்தர்கள் அறந்தாங்கி MLA சந்தித்து மனு.!




கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் முக்கியஸ்தர்கள் அறந்தாங்கி MLA சந்தித்து மனு அளித்தனர். 

கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் முக்கியஸ்தர்கள் அறந்தாங்கி MLA  சந்தித்து மனுவில் கூறியிருப்பதாவது, 

எங்கள் ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள அவுலியா நகர் பகுதியில் சுமார் முன்னூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்கள் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரமே வருகிறது. இதனால் வெயில் காலத்தில் நாங்கள் வீட்டில் இருக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். மேலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் பல மின்சாதன பொருட்களும் பழுதாகிவிட்டது. இது சம்மந்தமாக எங்கள் பகுதி கொடிக்குளம் மின்வாரிய அலுவலகத்தின் உதவி மின் பொறியாளரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதனடிப்படையில் அவுலியா நகர் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைக்க அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துள்ளதாக தெரிவித்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அவுலியா நகர் பகுதியில் நேரிடையாக வந்து பார்வையிட்டு புதிய மின்மாற்றி அமைக்க இடத்தையும் தேர்வு செய்தார்கள். ஆனால் இதுநாள் வரை புதிய மின்மாற்றி அமைக்கப்படாமல் காலதாமதமாகி கொண்டே செல்கின்றது. எனவே மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவுலியா நகர் பகுதியில் விரைவில் புதிய மின்மாற்றி அமைத்து தருமாறு ஊர் ஜமாஅத்தின் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம். 
 
இதில் கோபாலப்பட்டிணம் மீனவர் சங்க தலைவர் பஷீர் முகமது மற்றும் அவுலியா நகர் முக்கியஸ்தர்கள்  சேனா என்கின்ற சேக் முஹம்மது, சாகுல் ஹமீது, சொ.கு.முபாரக் அலி, மந்திரி என்கின்ற செய்யது முஹம்மது அலியார், நாகூர் கனி, நாகூர் பிச்சை மற்றும் உஸ்மான் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டு  அறந்தாங்கி MLA  அவர்களிடம் மனு அளித்தனர். 





மனுவை பெற்றுக் கொண்ட MLA அவர்கள் உடனடியாக கொடிக்குளம் உதவி மின்பொறியாளர் அவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதன்பிறகு ஒரு வாரத்திற்குள் உங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்கள். 

தகவல்:
J.உஸ்மான் அலி நாஃபியீ ஆலிம்,கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments