இந்தியாவின் முன்மாதிரி ஊராட்சியாக ஊராட்சித்தலைவர் வையம்பட்டியை மாற்றிட புதுத்திட்டம்




திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கிணறு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சூர்யா சுப்பிரமணி. 18 பேர் ஊராட்சி மன்ற தலைவ ருக்கு போட்டியிட்ட போதிலும், பொதுமக்களை இவரது பிரச்சார யுக்தி கவர்ந்ததால் 1232 வாக் குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர், பதவி ஏற்ற 6ம் தேதி முதல் வையம்பட்டி ஊராட்சி மன்றத்தில் உள்ள 12 வார்டுகளிலும், தினசரி காலை, மாலை சென்று குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதி உள் பட அனைத்து அடிப்படை வசதி கள் குறித்து பொதுமக்களிடையே கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.

இவரது அணுகுமுறை இப்பகுதி பொதுமக்களை கவர்ந்த நிலையில், சூர்யா சுப்பிரமணி நேற்று நிருபர்களிடம் கூறியதா வது: 

25க்கும் மேற்பட்ட கிரா மங்களை உள்ளடக்கிய இந்த வையம்பட்டி ஊராட்சியை, இந்தி யாவிலேயே நெகிழி இல்லாத தூய்மையான முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதே எனது இலக்கு. இதற் காக ஊராட்சியில் பணி புரியும் 85 துப்புரவு பணியாளர்கள். தூய்மை பணியாளர்கள். மேல்நிலை நீர்த் பதகக தொட்டி அப்ரேட்டர்க உரிய உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளது. பொது இடங்க ளில் குப்பை கொட்டக் கூடாது. நெகிழியை பயன்படுத்த கூடாது. இதனை வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இது சம்பந்த.
ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வையம்பட்டி ஊராட்சி மன்ற வார்டில் உள்ள பொது மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க தனியாக கிராம முக்கியபிரமுகர்கள் உள்ளடக்கிய ஒரு விரல் புரட்சி என்ற வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குறைகளை நிவர்த்தி செய்ய ஊராட்சி மன்ற தலைவர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சிசெயலாளர், மற்றும் பணியாளர்க ளுக்கென உள்ள ஒரு வாட்ஸ்அப் குரூப் செயல்படுகிறது. பொது மக்களின் குறைகள் அந்த குரூப் பில் பதிவிடப்பட்டு உடனடியாக சரி செய்யப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் தங்களது குறை களை தெரிவிக்க ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலி ருந்தபடியே தெரிவிக்க விரைவில் வையம்பட்டி பஞ்சாயத்து 2020. என்ற புதிய செயலி (ஆப்) உரு வாக்கப்படும். அதனை பொது மக்கள் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து, அந்த புதிய செயலியில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் இந்த பணிக்கு துணைத் தலைவர் அன்பரசன் மற் றும் அனைத்து வார்டு உறுப்பினர்க ளும் உறுதுணையாக இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். ந

தமிழக அரசு இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செக் பவர் தராத போதிலும், தமது சொந்த செலவில் வளர்ச்சிப்பணி மற்றும் அடிப்படை வசதிகளை தேர்தல் வாக்குறுதிகளில் சொள்ளபடி சூர்யா சுப்பிரமணி நிறைவேற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments