கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் இன்று (ஜூன் 15) 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கடவில்லை






கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் இன்று (ஜூன் 15) 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கபடவில்லை.

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் இன்று (ஜூன் 15) முதல் வழங்கப்படுகின்றன.

நிவாரணத்தை வழங்குவதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி குறிப்பிட்டு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேதியில் நிவாரண பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் நம்பர் 1 ரேஷன் கடை (பெரிய பள்ளிவாசல் அருகே), நம்பர் 2 ரேஷன் கடை (காட்டுகுளம் பள்ளிவாசல் அருகே) உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் இன்று ஜூன் 15 செவ்வாய்கிழமை 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கபடவில்லை.
 
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் கோபாலப்பட்டிணத்தில் வழங்கபடாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது:

கோபாலப்பட்டிணத்திற்கு இன்று (ஜூன் 15) பொருட்கள் மற்றும் நிவாரணம் வராத காரணத்தினால் கொடுக்கபடலில்லை  மேலும் இன்று (ஜூன் 15) கோபாலப்பட்டிணத்தில் 200 நபர்களுக்கு டோக்கன் வழங்கபட்டு நாளை (ஜூன் 16) ரூ.2000 மட்டும் வழங்கப்படும் என்றும் மளிகை பொருட்கள் இன்னும் வரவில்லை என்று கூறினார்.

*தமிழக அரசின் அறிவிப்பு*

இந்த பொருட்கள் இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களை இன்று முதல் இந்த மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம். வெளியூர் சென்று இருந்தவர்கள் வீடு திரும்பிய பிறகு பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் அவசரப்பட தேவையில்லை. நெரிசல் இல்லாமல் பொறுமையாக வாங்கி செல்லுமாறு சிவில் சப்ளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாராவது ஒருவர் வந்து ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போது கைரேகை அவசியம் இல்லை, ஸ்மார்ட் கார்டு மற்றும் டோக்கன் கட்டாயம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments