கோபாலப்பட்டிணம் ரேஷன் கடையில் 2ம் கட்ட நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்! (படங்கள்)



கோபாலப்பட்டிணத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா 2-ம் கட்ட நிவாரணம் தொகையினை மீமிசல் கூட்டுறவு சங்க தலைவர் J.தாஹீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2-ம் கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும்  காட்டுகுளம் தெருவில் உள்ள நியாயவிலைக்கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2-ம் கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்தை மீமிசல் கூட்டுறவு சங்க தலைவர் உதயம் J.தாஹீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சுப்ரமணியன் மீமிசல் கூட்டுறவு சங்க துணைத்தலைவர், A.பாரூக் அலி திமுக ஒன்றிய பிரதிநிதி, காதர் பாட்சா திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி, V.M.A. அப்துல் காதர் கோபாலப்பட்டிணம் திமுக கிளை பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து பொருட்களையும், நிவாரணத்தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கோபாலப்பட்டிணத்திற்கு வராததால் வழங்கப்படவில்லை.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments