இலவச தையல் இயந்திரம் பெற புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு: 30-ந் தேதி கடைசி நாள்!புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு 2021-22-ம் ஆண்டுக்கான தையல் எந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகளாக வருமானச் சான்று ரூ.72 ஆயிரத்திற்குள் தாசில்தாரிடம் பெற வேண்டும். இருப்பிடச் சான்று (தாசில்தாரிடம் பெற வேண்டும் அல்லது ரேஷன் கார்டு), 6 மாத கால பயிற்சியில் பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, வயது சான்று 20 முதல் 40 வரை அல்லது கல்வி சான்று அல்லது பிறப்புச்சான்று இணைக்கப்பட வேண்டும். 

மேலும் சாதிச்சான்று, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு 2 கலர் புகைப்படம். விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதறவற்ற மகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கான சான்று நகல், ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments