நத்தம் அருகே ரூ.50 லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்!


சரக்கு வாகன ஓட்டுனரிடம் ரூ. 50 லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜவகர். இவர் நத்தம் மதுரை சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது . இதை தடுத்து நிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் ஓட்டுநரிடம் உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதன் பின்னர் காய்கறி வாகன ஓட்டுனரிடம் ரூபாய் 50 லஞ்சமாக அவர் பெற்றுள்ளார். இதை வேனில் வந்த சில நபர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்நிலையில் திண்டுக்கல் பரளிப்புதூர் சோதனைச் சாவடியில் ரூ.50 லஞ்சம் வாங்கிய நத்தம் எஸ்.எஸ்.இ ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சரக்கு வாகன ஓட்டுனரிடம் ரூ. 50 லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானதால் எஸ்.பி. ரவளி பிரியா ஜவகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments