ஆவுடையார்கோவிலில் கதிர் அறுக்கும் எந்திரம் மோதி தந்தை கண்முன்னே சிறுவன் பலி





    
ஆவுடையார்கோவிலில் கதிர் அறுக்கும் எந்திரம் மோதி தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜ்நகர் அருகே பெருமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ஹரிகரன் (வயது 14). இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தானியங்கி கிடங்கு அருகே கதிர் அறுக்கும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதன் அருகே ராஜமாணிக்கம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்று கொண்டு இருந்தார். அவரது மகன் ஹரிகரன் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்கள் நிற்பதை கவனிக்காமல் பெருமருதூர் கிராமத்தை சேர்ந்த  பாக்கியராஜ் (32) என்பவர் கதிர் அறுக்கும் எந்திரத்தை இயக்கினார்.

அப்போது, மோட்டார் சைக்கிள் மீது கதிர் அறுக்கும் எந்திரம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஹரிகரன் கீழே விழுந்தான். இதனிடையே அவனது தலையில் கதிர் அறுக்கும் எந்திரத்தின் சக்கரம் ஏறியதில் தந்தையின் கண்முன்னே ஹரிகரன் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  இறந்தான்.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments