புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் வழியான சட்டவிரோத செயல்களை தடுக்க மீனவர்களின் பங்கு முக்கியமானது: போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பேச்சு!புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் வழியான சட்டவிரோத செயல்களை தடுக்க மீனவர்களின் பங்கு முக்கியமானது என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாா்த்திபன் தெரிவித்தார்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமை தாங்கினார்.

இதில், கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறையினர், மீன்வளத்துறையினர், போதைபொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினர், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடல் வழியான சட்டவிரோத செயல்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பேசுகையில், கடலில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments