ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு!ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி துணை கலெக்டரும், மேற்பார்வை அலுவலருமான மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று ஆவுைடயார்கோவில் பிர்க்காவுக்கு நடைபெற்றது.

பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன. இதில் ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் ஜபருல்லா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments