கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பது எப்படி?- பொது சுகாதாரத்துறை விளக்கம்






வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ‘பாஸ்போர்ட்’ விவரங்களை இணைப்பது எப்படி? என்பது குறித்து பொது சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை இணைப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

* தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் https://selfregistration.cowin.gov.in/ என்ற கோவின் செயலிக்குள் செல்ல (லாக்-இன்) வேண்டும்.
 
* தடுப்பூசி செலுத்திய போது அளித்த தொலைபேசி எண்ணை சரியாக பதிவிட வேண்டும்.

* தொலைபேசி எண்ணுக்கு வரும், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல்லை (ஓ.டி.பி) பதிவிட வேண்டும்.

* உள்ளே நுழைந்த பிறகு வலது பக்கம் உள்ள Raise an issue (ரைஸ் யேன் இஷ்ய்யூ) என்ற தெரிவை அழுத்தவும்.

* அதில் Add passport details (ஏட் பாஸ்போர்ட் டீட்டெய்ல்ஸ்) என்பதை தேர்வு செய்யவும்.

* பின்னர், யாருக்கு பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டுமோ அவரது பெயரை தேர்வு செய்யவும்.

* அதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.

* அந்த விவரங்கள் சரியானவை என்று சுய ஒப்பம் அளித்த பிறகு அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

* உங்களது விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும்.

* அதன் பின்னர், முகப்பு பக்கத்துக்குச் செல்லவும்.

* வேண்டுகோளின் நிலையை அறிவதற்கான (டிராக் ரிக்வஸ்ட்) வசதியை தேர்வு செய்யவும்.

* உங்களது விவரங்கள் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற வாசகங்கள் திரையில் தோன்றும்.

* மீண்டும் முகப்பு பக்கத்துக்கு வந்து கடவுச்சீட்டு விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு இது அத்தியாவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments