வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் எந்திரங்கள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி, கிணறு மற்றும் இதர பாசன விவசாயத்தில், நில உழவு பணியிலிருந்து அறுவடை பணிகள் வரை எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள ‘வேளாண்மை எந்திரமயமாக்கல்” பணிகளை வேளாண்மைப் பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் திட்டத்தில், உழுவை எந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.340-க்கும், மண் தள்ளும் எந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.840-க்கும், மினி பொக்லைன் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660-க்கும், புதிய நெல் அறுவடை எந்திரம் செயின்மாடல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,415-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உழுவை எந்திரங்களில் இணைப்பு கருவிகளாக, கடலை பிடுங்கும் எந்திரம், கடலை கொடியிலிருந்து கடலைக்காய் பிரிக்கும் எந்திரம், விதை விதைக்கும் எந்திரம், கரும்புதோகைகளை துகள்களாக்கும் எந்திரம், வைக்கோல் கட்டும் எந்திரங்கள் என பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்ப கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.340 என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள்
சிறுபாசன திட்டத்தில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொள்ள ஒரு பணியிடத்திற்கு ரூ.500-க்கும், ஆழ்துளைக்கிணறு அமைக்க ரோட்டரி டிரில் ஒரு மீட்டருக்கு ரூ.130 என அரசு நிர்ணயித்துள்ள குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வட்டார விவசாயிகள், திருக்கோகர்ணத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும்,  அறந்தாங்கி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அறந்தாங்கியில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகள்...
புதுக்கோட்டையில் தலைமையிடத்தில் உள்ள செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தினையும் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம். இந்த  தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments