கொட்டும் மழையில் ஸ்டேன் சுவாமிக்கு நீதி வேண்டி புதுக்கோட்டையில் SDPI போராட்டம்
புதுக்கோட்டை : மனித உரிமைப் போராளி பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் சிறைச்சாலை மரணத்தை கண்டித்தும், UAPA சட்டத்தை திரும்பப்பெறக்கோரியும் ”ஸ்டேன் சுவாமியின் மரணம் ஜனநாயக படுகொலையே!” என்ற முழக்கத்துடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் காசிநாத துரை அவர்களும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் சகோதரர் ஸலாவுதீன் அவர்களும் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் டிவிஷன் தலைவர் அபூபக்கர் சித்தீக் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments